வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா : பீகார் மாநிலம், பாகல்பூரில் இருந்து ககாரியாவை இணைக்கும் விதமாக, 3.1 கி.மீ., நீளத்துக்கு, பாலம் கட்ட, 2014 ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது.
மொத்தம், ரூ. 1,710 கோடியில் கட்டப்பட்டு வந்த, இப்பாலம் இன்று காலை வீசிய, பலத்த காற்று மற்றும் மழையால் இடிந்து விழுந்துள்ளது.
மோசமான வானிலையால், பாலத்தின் 4 மற்றும் 6வது துாண்களுக்கு இடையே, 100 அடி துாரத்துக்கு பாலம் இடிந்து விழுந்துள்ளதாக, பாகல்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அம்மாநில சாலை கட்டுமானத்துறை அமைச்சர், நிதின் நபின், பாலத்தை கட்டி வந்த, தனியார் நிறுவனத்திடம் அறிக்கை கேட்டுள்ளதாக கூறியுள்ளார்.