ஹாசன்:மூதாட்டி ஒருவர், 30 ஆண்டுகளாக வளர்த்து வந்த தென்னை மரங்களை, விஷமிகள் வெட்டி சாய்த்துள்ளனர்.
ஹாசன், சென்னராயபட்டணாவின், சானேனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் நஞ்சம்மா, 70. இவர் தனக்கு சொந்தமான 3.36 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்துகிறார். இந்த நிலத்தில் 30 ஆண்டுகளாக, 18 தென்னை மரங்களை வளர்த்து வந்தார்.
இவரது குடும்பத்துக்கு, இங்குள்ள தென்னை மரங்கள் வாழ்வாதாரமாக இருந்தன. இந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. தங்களுக்கு சொந்தமானது என, பக்கத்து நிலத்தின் ராமையா, மஞ்சுநாத் தகராறு செய்தனர். இது குறித்து, நஞ்சம்மா குடும்பத்தினர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை, ராமையாவும், மஞ்சுநாத்தும் ஜே.சி.பி., இயந்திரங்களை கொண்டு வந்து, நஞ்சம்மாவின் குடும்பத்தினர், 30 ஆண்டுகளாக பாடுபட்டு வளர்த்த தென்னை மரங்களை வெட்டி சாய்த்தனர். இது குறித்து, ஸ்ரவணபெளகோலா போலீசார் விசாரிக்கின்றனர்.