சிவாஜிநகர்: லஞ்சம் வாங்கியதாக, சிவாஜி நகர் பெண் இன்ஸ்பெக்டரை, 'சஸ்பெண்ட்' செய்து, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் அதிரடி உத்தரவிட்டார்.
பெங்களூரு சிவாஜி நகர் மகளிர் போலீஸ் நிலைய எஸ்.ஐ., சவிதா, 38. வரதட்சணை புகாரில் சிக்கியவருக்கு முன்ஜாமின் வாங்கி கொடுக்க, லஞ்சம் வாங்கியதாக சவிதா உட்பட நான்கு போலீஸ்காரர்களை, சில நாட்களுக்கு முன், லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில், இன்ஸ்பெக்டர் சுமா, 42, என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
விசாரணையில், பல வழக்குகளில் சுமா லஞ்சம் வாங்கியதும், பணியில் அலட்சியமாக நடந்ததும் தெரிந்தது.
லஞ்சம் வாங்குவதாக சுமா மீது, பெங்களூரு கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் பீமாசங்கர் குலேத்துக்கும் ஏராளமான புகார்கள் சென்றுள்ளன.
அவரும் சுமாவை எச்சரித்து உள்ளார். ஆனால், அவரது எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி, சுமா தொடர்ந்து லஞ்சம் வாங்கியதும் தெரிந்தது.
இதனால், சுமாவை 'சஸ்பெண்ட்' செய்து, போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று உத்தரவிட்டார்.