வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாரில் சிக்கி உள்ள பா.ஜ.,எம்.பி., தனது சொந்த தொகுதியில் நடைபெற உள்ள பேரணியில் கலந்து கொள்ள உள்ளார்.
![]()
|
இந்திய கூட்டமைப்பின் தலைவரும் உ.பி.,மாநிலத்தின் கைசர்கஞ்ச் தொகுதி பா.ஜ.,எம்.பி.,யுமானவர் பிரிஜ்பூஷன். இவர் மீது பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றம் சாட்டி வருவதுடன் எம்.பி.,யை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மத்தியில் ஆளும் பா.ஜ.,வின் ஒன்பது ஆண்டு கால சாதனையை விளக்கும் வகையில் மஹாசம்பர்க் அபியான் என்ற பெயரில் தனது சொந்த தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டமும் அதனை முன்னிட்டு நடைபெறும் பேரணியிலும் கலந்து கொள்ள உள்ளதாக பிரிஜ்பூஷன் கூறி உள்ளார்.
![]()
|
முன்னதாக நாளை (5 ம் தேதி) அயோத்தியில் ஜன் சேத்னா என்ற மஹா பேரணியில் கலந்து கொள்ள இருந்தார். மல்யுத்த வீராங்கனைகளின் புகார் எதிரொலி காரணமாக போலீஸ் விசாரணையை காரணம் காட்டி பேரணியை ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement