பாலாசோர் : ஒடிசாவில் விபத்து நடந்த பகுதியில், 51 மணிநேரத்துக்கு பின், மீண்டும் ரயில் சேவை துவங்கி உள்ளது.
![]()
|
ஒடிசா மாநிலம், பாலசோர் இடத்தில் கோரமண்டல், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்தடுத்து, சரக்கு ரயில் மீது மோதிய விபத்தில், 275 பேர் பலியாகினர் ; 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த பகுதியில், நேற்று முன்தினம் முதல் தங்கியுள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மீட்பு பணிகள் முடிந்து, தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டு வருவதாக, நேற்று (மே.,4)ம் தேதி தெரிவித்திருந்தார்.
![]()
|
இச்சூழலில், நாட்டையே உலுக்கிய இந்த விபத்து நடந்த பகுதியில், 51 மணிநேரத்துக்கு பின், சரக்கு ரயில் இயங்க துவங்கி உள்ளது.
இது குறித்த, வீடியோவை அஸ்வினி வைஷ்ணவ், தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.