''ஒரே இடத்துல இருக்கிறவங்களை, துாக்கியடிக்க பட்டியல் ரெடி பண்றாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்ல, கள்ளச்சாராயம் குடிச்சு, 23 பேர் இறந்துட்டாங்களே... இதுக்கு, அங்க பல வருஷங்களா பணியில இருந்த போலீசார் தான் காரணம்னு தெரியவந்துச்சு பா...
''அவங்கள்ல பலரை அதிரடியா மாத்திட்டாங்க... இதே மாதிரி, தமிழகம் முழுக்க மூணு வருஷத்துக்கும் மேல, ஒரே இடத்துல பணியில இருக்கிற போலீசார் யார், யார்னு பட்டியல் எடுக்கிறாங்க பா...
![]()
|
''சில இடங்கள்ல, எஸ்.பி., தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள், ஆறு வருஷத்துக்கும் மேல ஒரே ஊர்ல பணியில இருக்காங்களாம்... 'இவங்களை மாதிரி ஆட்களை அதிரடியா துாக்கி அடிச்சாலே, பாதி சமூக விரோத செயல்கள் குறைஞ்சிடும்'னு போலீஸ் அதிகாரிகள் கணக்கு போடுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement