வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பால் அடித்த காலம் போய் ஆசிரியர்களை மாணவர்கள் பிரம்பால் அடிக்கும் காலம் வந்து விட்டது. எனவே ஆசிரியர்கள் 'அட்சஸ்ட்' செய்து கொள்ள வேண்டும்' என தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ளதற்கு பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய வீடியோ காட்சி 'வாட்ஸ் ஆப்' வாயிலாக வலம் வருகிறது. அதில் 'மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பெடுத்து அடித்த காலம் மாறி மாணவர்கள் பிரம்பெடுத்து ஆசிரியர்களை அடிக்க வரும் காலமாகி விட்டது. எல்லாம் கால மாற்றம். இதையெல்லாம் அட்ஜஸ்ட் செய்து தான் கல்வி கற்பிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
இதற்கு பேராசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதுகுறித்து. தமிழக ஆசிரியர் பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற சங்க தலைவர் தீர்த்தகிரி, செயலர் இளம்பரிதி, பொருளாளர் கவிதா ஆகியோர் கூட்டாக அறிக்கையில் 'உயர் கல்வித்துறை அமைச்சராக இருப்பவரே இப்படி பொறுப்பின்றி பேசியிருப்பது ஆசிரியர்களை வேதனை அடையச் செய்துள்ளது. பொன்முடியின் பேச்சு கண்டனத்திற்குரியது' என தெரிவித்துள்ளனர்.
![]()
|
ஆனால் ஆசிரியர்கள் நிராயுதபாணியாக வகுப்பறைக்கு சென்று பாடம் நடத்தி விட்டு தங்களை தற்காத்துக் கொண்டு திரும்பும் நிலை உள்ளது. இது ஆரோக்கியமான விஷயமல்ல. மாணவர்களின் இந்த போக்கை மாற்ற வேண்டும். அதற்கு உயர்கல்வி அமைச்சர் உயர்கல்வித் துறை அரசு போலீஸ் மற்றும் பெற்றோர் இணைந்து மாணவர்களை நெறிப்படுத்த வேண்டும்.
மாறாக மாணவர்களின் இந்த செயல் காலமாற்றம்; அதை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று சாக்குபோக்கு கூறி தங்களுக்குரிய பொறுப்பை தட்டி கழித்து விட்டு கடமையில் இருந்து விலகுவது ஆசிரியர்களை மட்டுமல்ல. இளைய சமூகத்தினருக்கும் சமுதாயத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.