மத்திய சிறையில் ஆசிரியை மானபங்கம்;  கைதியை காப்பாற்றும் சிறை அதிகாரிகள்
மத்திய சிறையில் ஆசிரியை மானபங்கம்; கைதியை காப்பாற்றும் சிறை அதிகாரிகள்

மத்திய சிறையில் ஆசிரியை மானபங்கம்; கைதியை காப்பாற்றும் சிறை அதிகாரிகள்

Added : ஜூன் 05, 2023 | கருத்துகள் (21) | |
Advertisement
திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில், தையல் ஆசிரியை ஒருவர், 'போக்சோ' தண்டனை கைதியால் கொடூரமாக மானபங்கம் செய்யப்பட்டதை, சிறை அதிகாரிகள் மூடி மறைத்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழக சிறைகளில் தண்டனைக் கைதியாக உள்ளவர்கள் படிப்பதற்காக, திருச்சி மத்திய சிறையில், ஐ.டி.ஐ., செயல்படுகிறது.கோவை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற திருமூர்த்தி, 25,
Jail officials rescue a teacher Manabangam prisoner in Central Jail  மத்திய சிறையில் ஆசிரியை மானபங்கம்;  கைதியை காப்பாற்றும் சிறை அதிகாரிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில், தையல் ஆசிரியை ஒருவர், 'போக்சோ' தண்டனை கைதியால் கொடூரமாக மானபங்கம் செய்யப்பட்டதை, சிறை அதிகாரிகள் மூடி மறைத்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சிறைகளில் தண்டனைக் கைதியாக உள்ளவர்கள் படிப்பதற்காக, திருச்சி மத்திய சிறையில், ஐ.டி.ஐ., செயல்படுகிறது.

கோவை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற திருமூர்த்தி, 25, என்பவர் உட்பட 35 தண்டனை கைதிகள், திருச்சி மத்திய சிறையில் தங்கி, தையல் படிக்கின்றனர்.

அவர்களுக்கு, 45 வயதுடைய தையல் ஆசிரியை, வகுப்பு நடத்தி வருகிறார். 1ம் தேதி காலையில் நடந்த வகுப்பிற்கு பின், பகல் 11:45 மணிக்கு கைதிகள் சாப்பிட சென்றனர்.

கைதி திருமூர்த்தி சாப்பாட்டை முடித்து முன்னதாகவே வகுப்பறைக்கு வந்தார். அங்கு தனியாக இருந்த ஆசிரியையின் வாயில் துணியை அடைத்து, சத்தம் போட விடாமல் செய்தார்.

ஆவேசமாக முத்தம் கொடுத்து, உதடுகளை கடித்தார். மேலும், அவரது நெஞ்சுப்பகுதியிலும், முகத்திலும் கடித்து, நகங்களாலும் காயங்களை ஏற்படுத்தினார்.

அதிர்ச்சியடைந்த ஆசிரியை, திருமூர்த்தியிடம் இருந்து விடுபட்டு, தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து, 'குத்தி விடுவேன்' என மிரட்டினார். அந்த கைதி, ஆசிரியையை விட்டு, குளியல் அறையில் ஒளிந்து கொண்டார்.

இது குறித்து, சிறைத்துறை அதிகாரிகளிடம், புகார் கொடுக்கச் சென்ற ஆசிரியையிடம், திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், 'இதனால் உங்களுக்குத் தான் கெட்ட பெயர், அசிங்கம். அப்படியே விட்டு விடுங்கள்' என மிரட்டல் தொனியில் கூறினார்.

அங்குள்ள பெண் அதிகாரியும் ஆசிரியைக்கு ஆறுதல் கூறாமல், புகார் கொடுக்கக் கூடாது என்பது போல மிரட்டினார்.

இதனால், மனமுடைந்த ஆசிரியை, அங்கிருந்து சென்று விட்டார்.


மெத்தனம்



பல்வேறு குற்ற பின்னணி கொண்ட ஆண் கைதிகளுக்கு, வகுப்பு எடுக்கச் செல்லும் பெண் ஆசிரியைக்கு, உரிய பாதுகாப்பு அளிக்காமல் சிறைத்துறை மெத்தனமாக இருந்துள்ளது.

மேலும், தண்டனை கைதியின் குற்றச் செயலை மறைக்கும் விதமாக, சிறை அதிகாரிகள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் ஆசிரியையை மிரட்டியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (21)

05-ஜூன்-202316:07:38 IST Report Abuse
ஆரூர் ரங் நேற்றைய 😇 பிறந்த நாள் கொண்டாடும் விதமாக செய்திருப்பான். 😝வனவாசம் போகட்டும். வான்கோழி படிக்கட்டும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
05-ஜூன்-202312:55:32 IST Report Abuse
Ramesh Sargam திருச்சி மத்திய சிறையில் தையல் டீச்சர் மானபங்கம். - துணிகளுக்கு தையல் போடும் டீச்சரின் மானத்தை 'தையல்' பிரிச்சிட்டாங்களே... சிறை - பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு அறை
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
05-ஜூன்-202312:40:43 IST Report Abuse
Anand கேடுகெட்ட விடியா மூஞ்சி ஆட்சியில் எல்லா வித சமூக விரோத செயல்களும் நடக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X