''புகார் குடுத்தவங்களையே கூப்பிட்டு மிரட்டுதாவ வே...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அண்ணாச்சி.
''எந்த ஊருல ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''திருப்பூர் மாவட்டத் துல, முக்கியமான பொது பிரச்னைகள், அரசு ஊழியர்கள் அலட்சியம், போலீசார் மீதான குறைகள் பத்தி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு பலரும் புகார்கள் அனுப்புதாவ...
''இந்த மனுக்களை, மாவட்டத்துக்கே அனுப்பி விசாரிக்க சொல்லுதாவ... ஆனா, இந்த மனுதாரர்களை மிரட்டல் பாணியில தான் போலீசார் விசாரணைக்கே கூப்பிடுதாவ வே...

''அப்படி வர்றவங்களிடம், 'இந்தப் புகார் சுமுகமா முடிஞ்சிடுச்சு... எந்தவித மேல் விசாரணையும் வேண்டாம்னு எழுதி குடுத்துட்டு போங்க'ன்னு கட்டாயப்படுத்தி எழுதி வாங்கிட்டு அனுப்பிடுதாவ...
''குறிப்பா, பொது பிரச்னைகள்ல புகார் குடுக்கிற சமூக ஆர்வலர்கள் பலரையும் இப்படி மிரட்டியே திருப்பி அனுப்பிடுதாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.