தடையின்றி ஆம்புலன்ஸ் செல்ல 'கிரீன் காரிடர்' திட்டம் அறிமுகம் 
தடையின்றி ஆம்புலன்ஸ் செல்ல 'கிரீன் காரிடர்' திட்டம் அறிமுகம் 

தடையின்றி ஆம்புலன்ஸ் செல்ல 'கிரீன் காரிடர்' திட்டம் அறிமுகம் 

Updated : ஜூன் 05, 2023 | Added : ஜூன் 05, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை-ஒடிசாவில் ரயில்கள் மோதிய கோர விபத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் சென்னை வந்தால், அவர்களுக்கு உடனடியாக சிறந்த சிகிச்சை அளிப்பதற்காக, சென்னை விமான நிலையத்தில் இருந்து, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வரை, 'கிரீன் காரிடர்' திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஒடிசாவில் ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் உதவி செய்ய, டி.ஜி.பி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-ஒடிசாவில் ரயில்கள் மோதிய கோர விபத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் சென்னை வந்தால், அவர்களுக்கு உடனடியாக சிறந்த சிகிச்சை அளிப்பதற்காக, சென்னை விமான நிலையத்தில் இருந்து, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வரை, 'கிரீன் காரிடர்' திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.latest tamil news


ஒடிசாவில் ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் உதவி செய்ய, டி.ஜி.பி., அலுவலகத்தில், கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது.

உதவிக்கு, 044 -28447701 மற்றும் 044 - 28447703 என்ற, தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அதேபோல, சென்னை மாநகர போலீசாரும், வேப்பேரியில் கமிஷனர் அலுவலகத்தில், காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளனர். உதவிக்கு, 044 - 23452359, பூக்கடை துணை கமிஷனர் ஷ்ரேயா குப்தா, 9498233333; உதவி கமிஷனர் பாலகிருஷ்ணன், 9444033599; இன்ஸ்பெக்டர் தளவாய்சாமி, 9840976307 ஆகியோரின் எண்களை தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ரயில் விபத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் மற்றும் சென்னைக்கு திரும்புவோருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை கிடைக்க, சென்னை விமான நிலையத்தில் இருந்து, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வரை, அண்ணாசாலையில், 'கிரீன் காரிடர்' என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


latest tamil news


இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

ரயில் விபத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள், மருத்துவமனைகளுக்கு செல்ல எவ்வித சிரமமும் ஏற்படக்கூடாது. அதற்காக, ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும் போது, போக்குவரத்தை சீர் செய்து, கிரீன் காரிடர் என்ற திட்டத்தின் கீழ், சிக்னல்களில் பச்சை விளக்குள் தொடர்ந்து எரியவிடப்படும். சாலைகளில் போக்குவரத்து போலீசாரும் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (2)

05-ஜூன்-202313:36:56 IST Report Abuse
அப்புசாமி இன்னும் ந்நலு நாளக்கி இப்பிடி. அதுக்கப்புறம் வழக்கம் போல எல்லா தடைகளும் ரோடுக்கு வந்துரும்.
Rate this:
Cancel
Raa - Chennai,இந்தியா
05-ஜூன்-202312:28:07 IST Report Abuse
Raa yaar
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X