வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை,-கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் சார்பில், 58 இடங்களில், இ - சேவை மையங்கள் துவக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் உள்ள நலிவடைந்த கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் வருவாயை பெருக்க, தொடக்க கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் சார்பில், சிமென்ட் விற்பனை மற்றும், 'இ - சேவை' மையங்கள் நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.
இந்த வகையில், தற்போது, 39 சங்கங்களில், இ - சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களை ஆண்டுக்கு, 61 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர்.
இதுகுறித்து, வீட்டுவசதி சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
வீட்டுவசதி சங்கங்களின் கோரிக்கை அடிப்படை யில், 58 இடங்களில், புதிதாக இ - சேவை மையங்கள் துவக்க, அரசு அனுமதி அளித்து உள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் இணைந்து, இந்த மையங்கள் விரைவில் துவங்கப்படும். மாவட்ட வாரியாக, எந்தெந்த சங்கங்களில், இந்த மையங்கள் அமைக்கலாம் என, தற்போது ஆய்வு நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.