கம்பம்: கம்பம் பகுதியில் ஆட்டம் காட்டி வந்த அரிசி கொம்பன் யானையை, மயக்க ஊசி செலுத்தி வனத்துறை பிடித்தனர். கும்கி யானைகள் உதவியுடன் யானை மாற்று இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இடுக்கி சின்ன கானலில் அட்டகாசம் செய்த அரிசிக்கொம்பன் அம்மாநில வனத்துறையினரால் அங்கிருந்து அகற்றப்பட்டு, ஏப்.30 ல் தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்டது. மே 2 ல் மேகமலை பகுதிக்கு வந்தது. அன்று முதல் மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு, வெண்ணியாறு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இரண்டு வாரங்கள் கழித்து, அரிசி கொம்பன் மீண்டும் தேக்கடி வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின் 2 வாரத்திற்கும் மேலாக அரிசி கொம்பன் மேகமலைக்கு வரவில்லை. மாறாக மே 27 முதல் கம்பம், சுருளிப்பட்டி, ராயப்பன்பட்டி, சின்ன ஒவுலாபுரம் பகுதிகளில் சுற்றி திரிந்தது குறிப்பிடத்தக்கது.