சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.
வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இன்றைய வீடியாவில் திருமணம் நடந்தது. அழைப்பிதழில், மொய், அன்பளிப்புகளுக்கு பதிலாக மாணவர்களுக்கு பயன்படும் புத்தகங்களை பரிசளிக்குமாறு ஜவகர் சுப்பிரமணிம், மனைவி பத்மாவதி வேண்டுகோள் விடுத்திருந்தனர். திருமணத்துக்கு வாழ்த்த வந்தவர்கள், புத்தகங்களை குவித்து விட்டனர். இது போன்ற ஒரு முயற்சியை யாரும் பார்த்ததில்லை என பலரும் வியந்து பாராட்டினர்.