திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்த குப்புசாமி அவரது பேத்தி கவிப்பிரியா(22) மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர், பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(45) ஆகிய மூவரும் ஆம்னி பஸ்ஸில் சிக்கி உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.