புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பர்கார் பகுதியில் சுண்ணாம்பு கல் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் இன்று(ஜூன் 05) தடம் புரண்டது. முதற்கட்ட தகவல் படி, 5 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு, தடம் புரண்டன என தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே, கடந்த ஜூன் 2ம் தேதி மூன்று ரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். மேலும், 900க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இது, கடந்த பல ஆண்டுகளில் நடந்துள்ள மிக கோரமான விபத்தாக கருதப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் சுமார் 51 மணி நேர சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு ரயில் சேவைகள் மீண்டும் இன்று(ஜூன் 05) துவங்கப்பட்டது.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் பர்கார் பகுதியில் சுண்ணாம்பு கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் இன்று(ஜூன் 05) காலை 11 மணியளவில் தடம் புரண்டது. 5 பெட்டிகள் தண்டவாளத்த்தை விட்டு விலகி கிடந்தது., தடம் புரண்டன. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது.