சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.
இது குறித்து பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 670 மேல்நிலை பள்ளிகளிலும், 435 உயர்நிலை பள்ளிகளிலும், நடுநிலை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவர்களின் நலன் கருதி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.