வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை :பிரபல, இந்து' நாளிதழ் குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து, மாலினி பார்த்தசாரதி ராஜினாமா செய்தார். இந்நிலையில் நிர்மலா லக்ஷ்மன் புதிய தலைவராக பொறுப்பேற்கிறார்.
தனது தலையங்க பார்வைக்கான இடம், நோக்கம் ஆகியன சுருங்கி வருவதால் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
![]()
|
கடந்த மாதம் புதிய பாராளுமன்ற திறப்பின் போது பிதமரிடம் ஆதீனம் செங்கோல் வழங்கியதில் விவகாரத்தில் உண்மையில்லை, வரலாற்று ஆதாரங்களும் இல்லை என இந்து குழுமத்தின் என்.ராம் தெரிவித்து வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக இன்று (ஜூன்05) தனது தலைவர் பதவியை மாலினி பார்த்தசாரதி ராஜினாமா செய்தார்.
பத்திரிகை துறையில், 30 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவர். இந்து நாளிதழ் வளர்ச்சியில், முக்கிய பங்காற்றியவர். கடந்த 2020 ஜூலை மாதம் இந்து நாளிதழ் இயக்குனர்கள் கூட்டத்தில், தலைவராக தேர்வானார். இன்று பதவி விலகினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement