புவனேஸ்வர் : ஒடிசா ரயில் விபத்தில் மகன் இறந்த செய்தியை கேட்டு, பால்சோர் ஓடி வந்த தந்தை, பிணவறையில் மயங்கிய நிலையில் கிடந்த, மகனை கண்டுபிடித்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
![]()
|
ஒடிசா மாநிலம், பால்சோர் ரயில் விபத்தில் பலியானவர்களின், உடல்கள் அடையாளம் காணப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
காயமடைந்தவர்களுக்கு, பிரதமர் மோடி உத்தரவுப்படி, சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், ஹவுராவைச் சேர்ந்த, ஹெலராம் மாலிக் என்பவர், ரயில் விபத்து செய்தியை அறிந்து, ரயிலில் பயணித்த, தனது மகன் பிஸ்வஜித்திடம் பேசி உள்ளார்.
அப்போது, பிஸ்வஜித் மிகவும் சோர்வாக பேசியதால், விபத்து நடந்த (ஜூன்.,2)ம் தேதி இரவு, ஆம்புலன்ஸ் வாகனத்தில், தனது மைத்துனர் தீபக் தாஸூடன் பாலசோருக்கு புறப்பட்டார்.
230 கி.மீ., துாரம் பயணித்து, பாலசோர் வந்த ஹெலராம் மாலிக் மற்றும் தீபக் தாஸ் ஆகியோர், அங்குள்ள மருத்துவமனைகளில், பிஸ்வஜித்தை தேடியுள்ளனர்.
ஆனால், அவர் விபத்தில் இறந்துவிட்டதாக, டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதனால், பஹானாகா உயர்நிலைப் பள்ளியில், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பிணவறைக்குச் சென்ற, ஹெலராம் மற்றும் தீபக் தாஸ் இருவரும், அங்கு, மயங்கிய நிலையில் இருந்த, பிஸ்வஜித்தை கண்டுபிடித்தனர்.
அவரை, மேல் சிகிச்சைக்காக கட்டாக் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கிருந்த, டாக்டர்கள் அறிவுறுத்திய நிலையில், டாக்டர்களிடம் அனுமதி பெற்று, ஒடிசாவில் இருந்து, பிஸ்வஜித்தை, கோல்கட்டா கொண்டு சென்றனர்.
நேற்று (ஜூன்.,4)ம் தேதி, அங்குள்ள, தனியார் மருத்துவமனையில் அவர், அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, பிஸ்வஜித்துக்கு கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தொடர்ந்து, அவர் சுயநினைவின்றி சிகிச்சையில் உள்ளார். முன்னதாக, அவர் உயிரிழந்ததாக, ஒடிசாவில் அறிவிக்கப்பட்டது குறித்து, டாக்டர்களிடம் கேட்கப்பட்டது.
![]()
|
அதற்கு, கோல்கட்டா தனியார் மருத்துவமனை, டாக்டர் சோம்நாத் தாஸ் கூறுகையில்,'மீட்பு பணிகள் ஈடுபட்டவர்கள் டாக்டர்கள் இல்லை. இதனால், விபத்து நடந்த இடத்தில், காயமடைந்து சுயநினைவின்றி பதிலளிக்காமல் இருந்தவர்களை, இறந்துவிட்டதாக அவர்கள், தவறாக நினைத்திருக்கலாம்.
மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள், அந்த அவசர சூழலில், காயமடைந்தவர்கள், இறந்தவர்களை கூர்ந்து கவனிக்காமல் போனதும், இதற்கு காரணமாக இருக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement