லக்னோ : உ.பி., மாநிலம், பருகாபாத் மாவட்டம், மத்னாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர், தினேஷ்குமார்.
இவரது, மகன் அக்-ஷய், 3. நேற்று, அக்-ஷய் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, புதரில் இருந்து, சிறிய பாம்பு வெளியே வந்துள்ளது.
ஆபத்தை உணராத சிறுவன், அந்த பாம்பை பிடித்து கடித்து, மென்று திண்றுள்ளான்.
அதன்பின், சிறிது நேரத்தில் சிறுவன் அலற ஆரம்பித்தான். அவனது, அலறல் சத்தம் கேட்டு வந்த பாட்டி, சிறுவன் பாம்பை சாப்பிட்டுள்ளதை, பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின், சிறுவனை அங்குள்ள, மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான்.
அங்கு, 24 மணிநேர கண்காணிப்பில் இருந்த சிறுவன், சிகிச்சகை்கு பின், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்.