பெங்களூரு: ''இயற்கை உருவாக்கிய எந்த ஒரு உயிரினத்தையும் கொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. நான் விலங்குகளை கொல்வதை எதிர்ப்பவன்,'' என போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
கர்நாடகாவில், முந்தைய பா.ஜ., ஆட்சியின் போது, பசுவதை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
தற்போது, காங்., ஆட்சிக்கு வந்துள்ளதால், பா.ஜ., கொண்டு வந்த பசுவதை தடை சட்டத்தை திரும்ப பெறுவதாக அமைச்சர்கள் உட்பட சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி பெங்களூரில் நேற்று கூறியதாவது:
இயற்கை உருவாக்கிய எந்த ஒரு உயிரினத்தையும் கொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. நான் விலங்குகளை கொல்வதை எதிர்ப்பவன்.
பசு மட்டுமின்றி, உலகில் உள்ள 84 லட்சம் உயிரினங்களையும் கொல்ல கூடாது. ஒவ்வொரு உயிரினமும் வாழ்வதற்கு உரிமை உள்ளது. என்னுடைய ஆதங்கத்தை ஊடகத்தினரிடம் வெளிப்படுத்துகிறேன். ஆனால், கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் வெளிப்படுத்த மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.