வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ :காங்., பிரமுகர் கொலை வழக்கில், பிரபல தாதாவும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், மவு சதார் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக, சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி சார்பில், ஐந்து முறை பதவி வகித்தவர் முக்தார் அன்சாரி, 59. பிரபல தாதாவான இவர் மீது, பல்வேறு கொலை, அடிதடி வழக்குகள் உள்ளன. இவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
![]()
|
இது தொடர்பான வழக்கு, வாரணாசியில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதையடுத்து இந்த வழக்கு,எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
கடந்த 32 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பு அளிக்கப்பட்டது.அவதேஷ் ராயை கொலை செய்த முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவனிஷ் கவுதம் தீர்ப்பளித்தார்.