லண்டன்: ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் இரங்கல் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்
ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2-ம் தேதி இரவில் மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் 275-பேர் பலியாகினர். 1000-த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தில் பலியானவர்களுக்கு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் , இரங்கல் தெரிவித்துஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நடந்த சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. ஒரு பயங்கரமான விபத்து நடந்த செய்தி அறிந்து நானும் எனது மனைவியும் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.