திருப்பூர் 15 வேலம்பாளையம் சிறுபூலுவப்பட்டி ரோட்டில் கதிர் என்பவருக்கு சொந்தமான பெயிண்ட், சிமெண்ட், கம்பி விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த குடோனை இரவு வழக்கம் போல் பூட்டிச் சென்றனர். இரவு 11:00 மணி அளவில் கடையி லிருந்து கரும்புகை வெளியேறியது.
உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு மாவட்ட உதவி அலுவலர் வீரராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கொளுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.