பல்லடம்: தி.மு.க., இணையதளம், 'இணையதள வெளியீடு ஒத்திவைக்கப்படுகிறது' என்ற அறிவிப்புடன் முடங்கிஉள்ளது.
தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சியின் செயல்பாடுகள், கொள்கைகள் மற்றும் அன்றாட நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை, கட்சித் தொண்டர்கள், பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க, சமூக வலைதளங்களை பெரிதும் நம்பியுள்ளன.
இதற்காக, தனித் தனியே இணையதள பக்கங்கள், முகநுால், டுவிட்டர் என, அனைத்திலும் கணக்குகளை துவங்கி, அதில், தங்கள் கட்சியின் செயல்பாடுகளை பதிவிட்டும் வருகின்றன.
தி.மு.க.,வுக்காக துவங்கப்பட்ட dmk.in என்ற இணையதள பக்கம் திடீரென முடங்கியுள்ளது.
'எதிர்பாராத சூழ்நிலையால் இணையதள வெளியீடு ஒத்திவைக்கப்படுகிறது. தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என, அதன் தளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இணையதளம் புதுப்பிக்கப்பட்டு வருகிறதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் தற்காலிகமாக முடக்கப்பட்டதா என்பது குறித்து தெரியப்படுத்தப்படவில்லை.