அவங்க தான் பகுத்தறிவு வியாதிகளாச்சே... சாரி, வாதிகளாச்சே...!
அவங்க தான் பகுத்தறிவு வியாதிகளாச்சே... சாரி, வாதிகளாச்சே...!

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

அவங்க தான் பகுத்தறிவு வியாதிகளாச்சே... சாரி, வாதிகளாச்சே...!

Updated : ஜூன் 06, 2023 | Added : ஜூன் 06, 2023 | கருத்துகள் (15) | |
Advertisement
ஹிந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிகுமார் அறிக்கை: 'என் தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும். என் குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறதோ, அப்போது தான், என் ஆத்மா சாந்தி அடையும்' என, உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட வேலுார் மாணவி விஷ்ணு பிரியாவின் குரல், தமிழகத்தில், பல குடும்பங்களில் உள்ள தாய்களின் அவலக்குரல். 'நீட்
They are rational diseases... Sari, vadi...!  அவங்க தான் பகுத்தறிவு வியாதிகளாச்சே... சாரி, வாதிகளாச்சே...!


ஹிந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிகுமார் அறிக்கை:


'என் தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும். என் குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறதோ, அப்போது தான், என் ஆத்மா சாந்தி அடையும்' என, உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட வேலுார் மாணவி விஷ்ணு பிரியாவின் குரல், தமிழகத்தில், பல குடும்பங்களில் உள்ள தாய்களின் அவலக்குரல். 'நீட் தேர்வு ரத்தாகும் போது தான், அனிதாவின் ஆன்மா சாந்தி அடையும்' என, மேடையில் வசனம் பேசிய முதல்வர் ஸ்டாலின், உடனே மதுக்கடைகளை மூடி மாணவி விஷ்ணு பிரியாவின் ஆன்மாவை சாந்தி அடைய வைக்க வேண்டும்.

அவங்க தான் பகுத்தறிவு வியாதிகளாச்சே... சாரி, வாதிகளாச்சே... 'ஆன்மா மேல எல்லாம் எங்களுக்கு நம்பிக்கை இல்லை'ன்னு துடைச்சு விட்டுட்டு போயிட்டே இருப்பாங்க!தி.மு.க., தலைமை நிலைய செயலர் மற்றும் வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் பேச்சு:

'அரசியல் என்பது அடிமட்ட மக்களுக்கானது. சிகை அலங்கார கடைகளில் கூட சிந்தனையை வளர்க்கலாம்' என்பதை, கருணாநிதியிடம் தான் கற்றேன். ஒரு வினாடி கூட வீணாக்கக் கூடாது என்பதையும், அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒரே மாதிரியாக இருப்பது என்பது அரிது என்பதையும், கருணாநிதியிடம் கற்றேன்.


அப்படி என்றால், தலைமை நிலைய செயலர் மற்றும் வீட்டு வசதி வாரிய சேர்மன் பதவிகளை ராஜினாமா பண்ணிட்டு, மற்றவங்களுக்கு வாய்ப்பு தரலாமே!விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி:

ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் பதவியில் இருந்து கொண்டே விசாரணை நடத்துவது சரியல்ல. சிக்னல் கோளாறு இருக்கிறது என்று, மேலாளர் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மிகச் சிறப்பாக செயல்பட்டு, ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களை பாதுகாப்பாக மீட்டு வர நடவடிக்கை எடுத்த, தமிழக முதல்வருக்கு பாராட்டுகள்.

ஒரே அறிக்கையில மத்திய அரசுக்கு குட்டும், மாநில அரசுக்கு ஷொட்டும் வைக்கிற வித்தையை, இவரிடம் மத்த அரசியல்வாதிகள் கத்துக்கலாம்!பா.ம.க., தலைவர் அன்புமணி பேச்சு:

பொது வாழ்க்கையில் இருப்பதால், பிரச்னைகளுடன் எழுந்து, பிரச்னைகளுடன் தான் துாங்குவோம். எங்களின் மன அழுத்தங்களை காற்றில் பறக்க வைப்பது இளையாராஜவின் இசை தான். நான் ஒரு டாக்டர் என்றாலும், எனக்கு அவர் டாக்டர். ஆம், உலகில் சிறந்த பல்கலை கழகங்களில் கிடைக்காத மருந்து அவரது இசை. இப்போது, நானும், அவரும் நண்பர்கள். அவரும், நானும் ராஜ்யசபா எம்.பி.,க்கள்.

வாஸ்தவம் தான்... இளையராஜாவின் இசையால் வசமாகா இதயம் உண்டோ?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (15)

06-ஜூன்-202319:28:54 IST Report Abuse
பேசும் தமிழன் வேலூர் மாணவி விஷ்ணு பிரியாவின் மரணத்தை .....அண்ணாமலை அவர்கள் தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்க்க வேண்டும்....அப்பொழுது தான் திமுக இரட்டை வேடம் மக்களுக்கு தெரியும் ....எதிர்கட்சியாக இருந்த போது டாஸ்மாக் கடையை மூட போராட்டம் நடத்துவது ....ஆளுங்கட்சி ஆன பின்பு ....அதை கண்டுகொள்ளாமல் ...மதுக்கடையை திறந்து வைத்து ....தமிழக மக்களை சீரலிப்பது .....இது தான் திராவிட மாடல்
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
06-ஜூன்-202310:50:53 IST Report Abuse
ramesh உண்மையில் வியாதி உள்ளவனுக்கு மட்டுமே நன்றாக இருப்பவர்களை பார்த்தாலும் காமாலை கண்ணுக்கு வியாதி உள்ளவராக தெரியும். இதில் எல்லாம் அடங்கும்
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
06-ஜூன்-202309:52:19 IST Report Abuse
KavikumarRam அனிதாவின் ஆன்மா இன்னும் சாந்திஅடையாததால் முதல்வர் பதவி விலக வேண்டும் - குருமா.
Rate this:
ramesh - chennai,இந்தியா
06-ஜூன்-202310:54:41 IST Report Abuse
rameshமுதலில் ரயில் விபத்துக்கு காரணமான உங்கள் பிரதம மந்திரியை பதவி விலக சொல்லுங்கள் .அதன் பிறகு மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குங்க...
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
06-ஜூன்-202312:30:22 IST Report Abuse
angbu ganeshரொம்ப அறிவாளி சார் நீங்க. எதுக்கு எத முடிச்சு போடறீங்க சார் ஒரு கொழந்த அவளோட அப்பா குடிச்சிட்டு வீட்டுல சண்டை போடறாருன்னு சொல்லி செத்தா அதுக்கும் ரயில்வே ACCIDENTUKKUM என்ன சம்பந்தம். மனசாட்சி வேணும் சார் தீயமூக்காக்கு இப்படி முட்டு கொடுக்க கூடாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X