எட்டு மாசம் தான் இருக்கு அடக்கி வாசிங்க! கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
எட்டு மாசம் தான் இருக்கு அடக்கி வாசிங்க! கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

எட்டு மாசம் தான் இருக்கு அடக்கி வாசிங்க! கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

Added : ஜூன் 06, 2023 | கருத்துகள் (29) | |
Advertisement
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்குவதால், எட்டு மாதங்களுக்கு 'அடக்கி' வாசிக்குமாறு, அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.தி.மு.க., அரசு பொறுப்பேற்று, இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. அடுத்தாண்டு லோக்சபா தேர்தலை சந்திக்க, அக்கட்சி தயாராகி வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலை போல மீண்டும் பிரமாண்டமான வெற்றியை அடைய, ஸ்டாலின் விரும்புகிறார். அதற்கு பங்கம்
Its only eight months old! Stalins instructions to the party  எட்டு மாசம் தான் இருக்கு அடக்கி வாசிங்க! கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்குவதால், எட்டு மாதங்களுக்கு 'அடக்கி' வாசிக்குமாறு, அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.


தி.மு.க., அரசு பொறுப்பேற்று, இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. அடுத்தாண்டு லோக்சபா தேர்தலை சந்திக்க, அக்கட்சி தயாராகி வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலை போல மீண்டும் பிரமாண்டமான வெற்றியை அடைய, ஸ்டாலின் விரும்புகிறார். அதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில், அமைச்சர்கள், மூத்த எம்.எல்.ஏ.,க்கள் செயல்பாடுகள் உள்ளன.


தமிழக மக்களையும், வாக்காளர்களையும், அரசு ஊழியர்களையும் கிண்டலடிக்கும் வகையில், அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். லோக்சபா தேர்தல், அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்., மாதங்களில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news

தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ளதால், அதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என, இவர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.


மூத்த அமைச்சர்களை அழைத்து, 'எதிர்க்கட்சிகளின் பலத்தை அதிகரிக்க நீங்களே காரணமாக இருந்து விடக் கூடாது. அடுத்த எட்டு மாதங்களில், ஒவ்வொரு நாளையும் கவனமுடன் கடக்க வேண்டும். 'அடுத்து வரும் மாதங்கள், மழை காலத்திலேயே கழிந்து விடும். இத்தகைய நாட்களில், மக்கள் அதிருப்தி அதிகரிக்கும். பெயரை கெடுத்து விட வேண்டாம்' என அறிவுறுத்தி உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (29)

Anand - chennai,இந்தியா
06-ஜூன்-202314:55:43 IST Report Abuse
Anand தன் வினை தன்னை சுடும்....
Rate this:
Cancel
N. Srinivasan - Chennai,இந்தியா
06-ஜூன்-202314:31:31 IST Report Abuse
N. Srinivasan நீ எல்லாம் ஒரு தலைவன்... கேட்கவே வெட்கமாய் இருக்கிறது.. இதுல பேசும் போது நான் ஒரு சர்வாதிகாரி என பீத்தல் வோட்டு வேணும் என்பதற்காக அடக்கி வாசி என சொல்லுவது அதை விட வெட்கக்கேடு .........
Rate this:
Cancel
Raa - Chennai,இந்தியா
06-ஜூன்-202314:21:53 IST Report Abuse
Raa ஆகவே, தேர்தல் நேரத்தில் மட்டுமே தான் நடிப்பு என்பது உறுதியாகிவிட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X