சென்னை : 'மகிந்திரா அண்டு மகிந்திரா' நிறுவனத்தின் வேளாண் இயந்திரங்கள் பிரிவு, அதன் நெல் நடவு மற்றும் அறுவடை இயந்திரங்களின் செயல்திறனை மேம்படுத்த, வீட்டுக்கு வீடு சேவையை, தமிழக வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
இந்த பிரத்யேக சேவை, இம்மாதம், 10ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
இந்த சேவையை வீட்டிற்கே நேரடியாக வந்து செய்து தரும் மகிந்திரா, இயந்திரங்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்க, பழுது உபகரணங்களை மாற்றுவது முதல், உடனடி தீர்வுக்காக ஒட்டுமொத்த சேவைகள் வரை அனைத்தையும் வழங்குகிறது.
இந்த சேவைக்கு முன்பதிவு செய்ய, '88880 44448' என்ற உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.