''விற்பனை பத்திரத்தை வழங்காம இழுத்தடிக்கிறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''கோவை மாவட்டத்துல, வீட்டு வசதி வாரியத்துல வீடுகள் வாங்கியவங்க, முழு தொகையை கட்டியும், பத்திரங்களை தராம இழுத்தடிக்கிறாங்க... இப்படி, 2,000க்கும் மேற்பட்டோருக்கு மாசக் கணக்கா விற்பனை பத்திரத்தை வழங்காம அலைக்கழிக்கிறாங்க பா...
''அதே நேரம், புரோக்கர்கள் மூலமா வர்ற பைல்களை மட்டும், 'கிளியர்' பண்ணி, உடனுக்குடனே பத்திரங்களை குடுத்துடுறாங்க... பொறியாளர்கள் துவங்கி கீழ்மட்ட ஊழியர்கள் வரைக்கும், லஞ்சத்துல மூழ்கி திளைக்கிறாங்க பா...
''பயனாளர்கள் பெரும்பாலும் வயசானவங்களா தான் இருக்காங்க... பத்திரம் கேட்டு போற இவங்களை, அலுவலக அதிகாரிகள் மரியாதை குறைவாகவும் நடத்துறாங்க... இதனால, அவங்க கடும் மன உளைச்சல்ல தவிக்கிறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''காசு இருந்தா தான், இந்த கவர்மென்ட்ல எந்த வேலையும் நடக்கும்னு சொல்லும்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் இடத்தை காலி செய்தனர்.