சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தர்மபுரி மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர். மேலும் சென்னையை ஒட்டியுள்ள சில அதிகாரிகள் வீடுகளிலும் ரெய்டு நடப்பதாக தெரிகிறது.
இது போல் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனின் வீட்டிற்குள் நுழைந்திருக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்து வருகின்றனர்.
கடந்த 2018 ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான அரசு திட்டங்களில் முறைகேடு செய்திருக்கிறார் என்ற புகாரை தொடர்ந்து இந்த சோதனை நடந்து வருவதாக தெரிகிறது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அதிமுக பிரமுகரும், அரசு ஒப்பந்தகாரருமான பழனிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.