சென்னை: இந்தாண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் எந்த பிரச்னையும் இருக்காது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.
மேலும், அவர் கூறியிருப்பதாவது: 3 மருத்துக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இன்று நல்ல முடிவு வரும். விரைவில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளோம். இந்தியாவிலேயே மாநில அரசு நடத்தும் கல்லூரிகளில் சென்னை மருத்துவ கல்லூரி தான் முதலிடம் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.