புதுடில்லி: பாலியல் புகாரில், பிரிஷ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, டில்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். சில தினங்களுக்கு முன், பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டது என டில்லி போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று(ஜூன் 06) உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவில் உள்ள பிரிஜ் பூஷண் வீட்டுப் பணியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பணியாளர்களிடம் விசாரித்த போது, வீட்டில் பிரிஜ் பூஷண் இல்லை என கூறப்படுகிறது.