சேலம்: சேலம் மாவட்டம் கல் பாரப்பட்டியை அடுத்த, மேல் காட்டுவளவு பகுதியை சேர்ந்த பூங்கொடி (27), தனது தாயார் மாரியம்மாள் (60) மற்றும் தந்தை வெங்கடாசலம் (70) ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் உத்தமசோழபுரம் பகுதியில் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த காரின் குறுக்கே, இவர்களின் இரு சக்கர வாகனம் சென்றதால் அதில் மோதி இவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே பூங்கொடி, மாரியம்மாள் இருவரும் உயிரிழந்தனர். வெங்கடாசலம் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து விரைந்த கொண்டலாம்பட்டி போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்துகின்றனர்.