வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் துடிப்பான ஜனநாயகம் செயல்படுகிறது என அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி பாரட்டியுள்ளார்.

பிரதமர் மோடி வரும் ஜூன் 21ம் தேதி முதல் ஜூன் 24ம் தேதி வரை அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில்,அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி நிருபர்களை சந்தித்தார்.
அப்போது, இந்தியாவில் ஆரோக்கியமான ஜனநாயகம் குறித்த கேள்விக்கு,ஜான் கிர்பி பதிலளித்து பேசுகையில், இந்தியாவில் துடிப்பான ஜனநாயகம் உள்ளது. டில்லியில் செல்லும், போது அதை நேரில் பார்க்க முடியும். ஜனநாயக அமைப்புகளின் ஆரோக்கியமும், வலிமையும் விவாதங்களில் முக்கிய பங்காக இருக்கும் என நான் எதிர்ப்பார்த்தேன்.
அது பற்றி பேச தயங்க மாட்டோம். பிரதமர் மோடி அமெரிக்க பயணம், இரு நாடுகளின் உறவு மற்றும் நட்பை வலுப்படுத்தும். பல நிலைகளில் இந்தியா அமெரிக்காவுக்கு கூட்டாளியாக உள்ளது. அந்த நாடு எங்களுக்கு மிகவும் முக்கியம் என சொல்வதற்கு எங்களிடம் நிறைய காரணங்கள் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணத்தில், அமெரிக்க பார்லிமென்டில் உரையாற்ற உள்ளார். அப்போது, அவர் இந்தியாவின் எதிர்காலம், இந்தியாவின் தொலைநோக்கு பார்வை, இந்திய அமெரிக்க நாடுகள் எதிர்கொண்டுள்ள உலகளாவிய சவால்கள் ஆகியவை குறித்து உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.