வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியா வந்துள்ள ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு பாதுகாப்பு துறையை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் பாதுகாப்பு துறை அமைச்சர் போரிஸ் பிஸ்தோரியஸ் 4நாட்கள் சுற்றுப்பயணம் இந்தியா வந்துள்ளார். இந்தியா வந்த அவருக்கு டில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின், டில்லியில் உள்ள தேசிய போர் நினைவகத்திற்கு சென்ற அவர், வீரமரணம் அடைந்த இந்திய ஆயுத படை வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

ஜெர்மனி அமைச்சர் போரிசை, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்தார். இதனை தொடர்ந்து, போரிசுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கை:
ஜெர்மனி பாதுகாப்பு துறை அமைச்சருடன் சந்திப்பில், பிராந்திய பிரச்சினைகள் மற்றும் முன்னுரிமைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
யோகாவின் மீதான அவரது ஆர்வம் பாராட்டுக்குரியது. இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே பாதுகாப்பு துறையை மேலும் வலுப்படுத்தவும் ஒப்புக்கொண்டோம் எனக் கூறியுள்ளார்.