வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கனிமவளத்துறை செயலாளராக இருந்த ஜெயகாந்தன் மாற்றப்பட்டார். அவருக்கு பதில், நிர்மல்ராஜ் புதிய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
∗ கனிம வளத்துறை செயலாளராக இருந்த ஜெயகாந்தன், சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஊழல் பேர்வழிகளுக்கு துணைபுரிந்தது, திருப்பூர் உதவி இயக்குநர் வள்ளலை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்தியது போன்ற நடவடிக்கை காரணமாக அவர், சமூக நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
∗ போக்குவரத்து துறை செயலாளராக இருந்த நிர்மல் ராஜ், கனிமவளத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இவர்களை தவிர்த்து.
∗ கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், போக்குவரத்துத் துறை கமிஷனராகவும்
∗ சமூக நலத்துறை மற்றும் கனிம வளத்துறை இயக்குநர் ரத்னா, மதுவிலக்கு மற்றும் கலால் துறை இயக்குநராகவும்
∗ ராமநாதபுரம் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஆணைய கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், மதுரை மாநகராட்சி கமிஷனராகவும்,
∗ மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் கலோன், சென்னை குடிநீர் வடிகால் வாரிய செயல் இயக்குநராகவும்,
∗ சேலம் மாவட்ட கிராமப்புற மேலாண் ஆணைய கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், சேலம் மாநகராட்சி கமிஷனராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
∗ இயற்கை வளங்கள் துறைக்கு கூடுதல் தலைமை செயலாளர் என்ற தற்காலிக பதவி உருவாக்கப்பட்டுள்ளது. அரசின் தலைமை செயலாளர் அந்தஸ்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ள இந்த பதவி, ஒராண்டிற்கு மட்டும் அமலில் இருக்கும். இந்த துறைக்கு, போக்குவரத்து துறையின் கூடுதல் செயலாளராக இருக்கும் பணீந்திர ரெட்டி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.