புவனேஸ்வர்: செகந்திராபாத் - அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலில், ஏசி பெட்டியில் தீடிரென புகை கிளம்பியது. இதனால் அச்சம் அடைந்த பயணிகள், ரயிலில் இருந்து இறங்கினர்.
அசாம் மாநிலம் அகர்தலாவில் இருந்து தெலுங்கானாவின் செகந்திராபாத்திற்கு வந்து கொண்டிருந்த செகந்திராபாத் - அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் தீடிரென புகை கிளம்பியது. இதனால், அச்சம் அடைந்த பயணிகள் அலறினர். ரயில் உடனடியாக ஒடிசாவின் பிரஹம்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ஊழியர்கள் உடனடியாக வந்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் வயர்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகை வந்தது தெரிந்தது.
பிரச்னை சரி செய்யப்பட்டதும், அந்த பெட்டியில் ஏற பயணிகள் மறுத்தனர். வேறு பெட்டியை சேர்த்தால் தான் பயணிப்போம் எனக்கூறினர். அதிகாரிகள் அவர்களுடன் பேசி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.