வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: விண்வெளி முதல் பாதுகாப்பு துறை, ஸ்டார்ட்-அப்கள் என அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

கடந்த 9 ஆண்டுகால மோடி ஆட்சியில் பெண்களின் முன்னேற்றம் சார்ந்த திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றியிருப்பதை நினைவுகூரும் விதமாக வளர்ச்சியை வழிநடத்தும் பெண்கள் என்ற கருத்தை சமூக வலைதளங்களில் முன்னெடுத்துள்ளனர். இது டிவிட்டர் டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. பாஜ., ஆட்சியின் பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜ., தேசிய தலைவர் நட்டா தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட அறிக்கை:
உலகமே வியக்கும் வகையில், கடந்த 9ஆண்டுகள் பாஜ., ஆட்சியில் பெண்களுக்கான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. விண்வெளி முதல் பாதுகாப்பு துறை, ஸ்டார்ட்-அப்கள் என அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது. இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்திய பெண் தொழில்முனைவோருக்கு பாஜ., அரசு 27 கோடி வரை முத்ரா திட்டம் மூலம் கடன்களை வழங்கியுள்ளது.எனக் கூறியுள்ளார்.

பாஜ., தேசிய தலைவர் நட்டா வெளியிட்ட அறிக்கை:
பெண்களுக்கு அதிகாரமளிப்பதைத் தாண்டி பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு வழிவகுத்தன. பெண்கள் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு, ஆயுதப்படையில் சேர சம வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை, கடந்த 9ஆண்டுகளாக பாஜ., அரசு உருவாக்கியுள்ளது. நாட்டின் பெண்கள் சக்தியை வலுவாகவும், தன்னம்பிக்கையுடனும், பெருமையுடனும் மாற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.