"ரயில் விபத்தில் உண்மை தெரிய வேண்டும்": கேட்கிறார் மம்தா
"ரயில் விபத்தில் உண்மை தெரிய வேண்டும்": கேட்கிறார் மம்தா

"ரயில் விபத்தில் உண்மை தெரிய வேண்டும்": கேட்கிறார் மம்தா

Updated : ஜூன் 06, 2023 | Added : ஜூன் 06, 2023 | கருத்துகள் (25) | |
Advertisement
கோல்கட்டா: ஒடிசா ரயில் விபத்தில் உண்மை வெளி வர வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்கள் சந்திப்பில் பேசுகையில் குறிப்பிட்டார்.ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை, கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களுக்கு மம்தா அளித்த பேட்டி: ஒடிசா மற்றும் மேற்கு வங்க அரசுகள் இணைந்து செயல்படுகின்றன. ரயில்
Odisha train accident: Mamata Banerjee meets injured patients in Cuttack "ரயில் விபத்தில் உண்மை தெரிய வேண்டும்": கேட்கிறார் மம்தா

கோல்கட்டா: ஒடிசா ரயில் விபத்தில் உண்மை வெளி வர வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்கள் சந்திப்பில் பேசுகையில் குறிப்பிட்டார்.


ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை, கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களுக்கு மம்தா அளித்த பேட்டி: ஒடிசா மற்றும் மேற்கு வங்க அரசுகள் இணைந்து செயல்படுகின்றன. ரயில் விபத்தில் காயமுற்றவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த 103 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் 97 பேர் சிகிச்சையில் உள்ளனர். ரயில் பயணம் செய்த, மேற்கு வங்கத்தை சேர்ந்த 31பேர் காணவில்லை.latest tamil news


ரயில் விபத்தில் உண்மை வெளி வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உண்மையை மறைக்கக் கூடாது. மக்களுக்காக உழைக்க வேண்டும். நாங்கள் மக்களுக்காக பணியாற்றி வருகிறோம். இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளேன்.


ரயிலில் பயணம் செய்து மன உளைச்சலுக்கு ஆளான சுமார் 900 பேருக்கு 10ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ரயில் விபத்தில் பல உயிர்கள் பலியாகியுள்ளன. இவ்வாறு மம்தா கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (25)

jss -  ( Posted via: Dinamalar Android App )
07-ஜூன்-202319:36:06 IST Report Abuse
jss அம்மன் பணம் லெப்ட் ரைட் வழங்குவதைப் பார்த்தால் 2000 நோட்டுகளை வினியோகித்து கணக்கு காட்ட முயற்சி நடை பெறுகிறது என நினைக்க தோன்றுகிறது். ஆடுகிற ஆட்டத்தைப்பார்த்தால் எதையோ்மறைக்க முயல்வதாகவும தெரிகிறது் சிபிஐ சிறிது ஆழமாக, அகலமாகத் தோண்ட வேண்டும்
Rate this:
Cancel
07-ஜூன்-202312:39:18 IST Report Abuse
தேவதாஸ் புனே சாமி.....இப்போ எனக்கு ஒரு உம்மை தெரிஞ்சாகணும்.........
Rate this:
Cancel
07-ஜூன்-202310:47:58 IST Report Abuse
மான் ராவுல் மற்றும் மம்தாவை விசாரணை நடத்த வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X