சென்னை:மாநில வளர்ச்சி ஒருவருக்கு புரியவில்லை. மக்களை குழப்பும் வகையில் பேசி வருகிறார்.கவர்னர் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்க வேண்டும் அது தான் அரசின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை தியாகராய நகரில் நலவாழ்வு மையத்தை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சென்னை கிண்டி பல்நோக்குமருத்துவமனை ஜூன் 15-ல் திறக்கப்படும். உலக அமைப்புகள் பாராட்டும் வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.மக்களை குழப்பும் நோக்கில் ஒருவர் தினந்தோறும் பேசி வருகிறார். கல்வியல் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
திமுக ஆட்சியில் கல்வியும்மருத்துவமும் இரண்டு கண்கள் ஆகும் சுகாதரத்துறையில் தேசிய அளவில் தமிழகம் 3 -வது இடத்தை பிடித்து உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும் . கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பது கவர்னருக்கு தெரியவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு வெற்றி பெற்றுள்ளது. ஏராளமான சுகாதார தி்ட்டங்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி செயல்படுத்தினார்.

நம்மை காக்கும் 48 திட்டத்தின்கீழ் ரூ.145 கோடி வரை செலவிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை தற்போது அனைவருமே போற்றுகின்றனர். தலை நிமிர்ந்து உள்ள மாநிலத்தின் வளர்ச்சி மாநிலத்தின் உயர்பொறுப்பில் உள்ள ஒருவருக்கு புரியவில்லை. மக்களை குழப்பும் வகையில் பேசி வருகிறார்.கவர்னர் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்க வேண்டும் அது தான் அரசின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.