வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ : அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் இன்ஜின் கோளாறு கண்டறியப்பட்டதால், அவசர அவசரமாக ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டது.
ஏர்இந்தியா விமானம் (AI173 ), 216 பயணிகள், 4 பைலட்டுகள் உள்பட 16 விமான பணியாளர்களுடன் டில்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நோக்கி புறப்பட்டது. அப்போது நடுவானில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக தெரியவந்தது.

இதையடுத்து ரஷ்யாவிற்கு திருப்பி விட வேண்டி, ரஷ்யாவின் ஷோகோல் மாகாணத்தில் உள்ள மகாதான் சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்க தகவல் தெரிவிக்கப்பட்டு, அவசர அவசரமாக அங்கு தரையிறக்கப்பட்டது. அதில் பயணித்த 216 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதனை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. தற்போதைய தகவல்படி, அதில் எத்தனை அமெரிக்கர்கள் பயணம் செய்கிறார்கள் என்ற தகவலும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.