புவனேஸ்வரம்: அடையாளம் காணப்படாத உடல்களை டி.என்.ஏ.,பரிசோதனை மூலம் கண்டறியப்படும் என ஒடிசா தலைமை செயலாளர் கூறி உள்ளார்.
ஒடிசாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் 278 பேர் வரை பலியாயினர் . மேலும் இதுவரயைில் 100க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு அவர்களின் உறவினர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும் அடையாளம் காணப்படாத உடல்கள் புகைப்படம் உதவியுடன் அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ஒடிசா மாநில தலைமை செயலாளர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், அடையாளம் காணப்படாத உடல்களை டி.என்.ஏ.,பரிசோதனை மூலம் கண்டறியப்படும் என தெரிவித்து உள்ளார்.