வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அமராவதி: ஆந்திராவில் பீர் பாட்டில்கள் ஏற்றிச்சென்ற மினி லாரி விபத்தில் சிக்கி கவிழந்ததில் சம்பவத்தில் சாலையில் சிதறி கிடந்த பீ்ர் பாட்டில்களை அப்பகுதி மக்கள் அள்ளிச்சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திராவில் மினி லாரி ஒன்று 200-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பீர் பாட்டில் லோடுடன் ஆந்திரா மாநிலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து கொண்டிருந்தது. அனகாள்ளி, பாயாவாரம் பகுதியில் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் லாரியில் வைக்கப்பட்டு இருந்த பீர் பாட்டில் அட்டை பெட்டிகள் சாலையில் சிதறி விழுந்தன. இதையறித்த அப்பகுதிவாசிகள் கையில் கிடைத்த பீர் பாட்டில்களை அள்ளிக் கொண்டு ஒட்டம் எடுத்தனர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது பாதிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement