வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: வரும் 22-ம் தேதி அமெரிக்க பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவது இரண்டாவது முறை என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க பயணம் மேற்கொள்ள உள்ள பிரதமர் மோடி , அந்நாட்டு பாராளுமன்ற கூட்டத்தில் உரையாற்ற வருமாறு பாராளுமன்ற செயலகம் அறிக்கை வெளியிட்டு அழைப்பு விடுத்துள்ளது. இதனை மோடி ஏற்றுக்கொண்டுள்ளார்.
![]()
|
இதையடுத்து அரசு முறைப்பயணமாக வரும் ஜூன் 22-ம் தேதி அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோபைடனை சந்தித்து இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பரம் நட்புறவு குறித்து பேசுகிறார். பின்னர் பைடன் அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து அமெரிக்க பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதற்கு முன் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க சென்றிருந்த பிரதமர் மோடி அந்நாட்டு பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார்.தற்போது வரும் 22-ம் தேதி இரண்டாவது முறையாக அமெரிக்க பார்லி. கூட்டு கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இதன் மூலம் இரண்டு முறை அமெரிக்க பாராளுமன்ற கூட்டத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் மோடி என கூறப்படுகிறது.
இவர் போன்று தென்னாப்பிரிக்கா அதிபர் மண்டேலா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, ஆகியோர் இரு முறைக்கு மேல் உரையாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement