காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தில் இருந்து கீழம்பி செல்லும் புறவழிச்சாலை உள்ளது. உத்திரமேரூர், வந்தவாசி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து வேலுார், பெங்களூரூ, அரக்கோணம், சென்னை செல்லும் கனரக வாகனங்கள் காஞ்சிபுரம் நகருக்குள் செல்லாமல புறவழி சாலை வழியாக சென்று வருகின்றன.
புறவழி சாலை என்பதால், இச்சாலையில் செல்லும் பெரும்பாலான வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இச்சாலையில் மேய்ச்சலுக்காக செல்லும் மாடுகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சூழல் உள்ளது.
எனவே, செவிலிமேடு - கீழம்பி புறவழி சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.