காஞ்சி வரதர் கோவில் தேர் திருவிழா கோலாகலம்  'வரதா, கோவிந்தா' கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
காஞ்சி வரதர் கோவில் தேர் திருவிழா கோலாகலம் 'வரதா, கோவிந்தா' கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சி வரதர் கோவில் தேர் திருவிழா கோலாகலம் 'வரதா, கோவிந்தா' கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Added : ஜூன் 06, 2023 | |
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், தேர்த் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, 'வரதா, கோவிந்தா' என கரகோஷம் எழுப்பினர். மதியம் 12:05 மணிக்கு தேர், நிலைக்கு வந்து சேர்ந்தது.காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று ஏழாம் நாள், தேர்த்
 Thousands of devotees participate in Kanchi Varadhar Temple Chariot Festival Kolakalam chanting Varatha, Govinda   காஞ்சி வரதர் கோவில் தேர் திருவிழா கோலாகலம்  'வரதா, கோவிந்தா' கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், தேர்த் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, 'வரதா, கோவிந்தா' என கரகோஷம் எழுப்பினர். மதியம் 12:05 மணிக்கு தேர், நிலைக்கு வந்து சேர்ந்தது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று ஏழாம் நாள், தேர்த் திருவிழா விமரிசையாக நடந்தது.

முன்னதாக நேற்று, அதிகாலை 3:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதர் கோவிலில் இருந்து புறப்பட்டார். அதிகாலை 4:30 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.

பின், தேரில் எழுந்தருளிய பெருமாளை தரிசனம் செய்ய அதிகாலையில் தேரடியில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

காலை 6:05 மணிக்கு, தேரை நிலையில் இருந்து, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கவும் கிளம்பியது. தேர் புறப்படும் போது, காந்தி சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

மக்கள் வெள்ளத்தின் நடுவில் ஆடி அசைந்து தேர் சென்றது. அப்போது பக்தர்கள் 'வரதா, கோவிந்தா' என கோஷம் எழுப்பினர்.

தேர் செல்லும் முக்கிய சாலைகளில் எங்கும் மக்கள் தலைகளாக காணப்பட்டன. அந்தந்த பகுதிகளில் பக்தர்கள் அன்னதானம், மோர் வழங்கினர்.

இவ்விழாவை காண, காஞ்சிபுரம் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். தேர் செல்லும் வழியில் பஜனை கோஷ்டிகள், பக்தி பாடல்கள் பாடி சென்றனர்.

தேர்த் திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், தேர் செல்லும் இடங்களில், மக்கள் கூட்டம், 'ட்ரோன்' வாயிலாக கண்காணிக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் நேற்று தேர்த் திருவிழாவை முன்னிட்டு நகரின் முக்கிய சாலைகளில் பேருந்துகள் செல்வது தடை செய்யப்பட்டன. முக்கிய சாலை சந்திப்பு இடங்களில் தடுப்பு அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தேர், காலை 6:05 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12:05 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. பின், தேரில் எழுந்தருளியுள்ள பெருமாளை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். மாலை 6:00 மணிக்கு வரதர் கோவிலை சென்றுஅடைந்தார்.

முதியவர் மயங்கி விழுந்து பலி

காஞ்சிபுரம் நாகலத்துதெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 62, கூலி தொழிலாளி. அவர் நேற்று குடும்பத்தாருடன் தேர்த் திருவிழாவை காண சென்றார். சாலையோரம் நின்று கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார்.

பின், '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வாயிலாக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X