குப்பை அள்ளுங்க...
திருப்பூர், 46வது வார்டு, அமர்ஜோதி பொன் நகரில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். அருகிலேயே தொட்டி இருந்த போது, குப்பையை ரோட்டில் வீசி எறிவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விஜயகுமார், அமர்ஜோதி பொன்நகர். (படம் உண்டு)
திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் பஸ் ஸ்டாப், ஆவின் பூத் அருகே குப்பை கொட்டப்படுகிறது. மாநகராட்சி குப்பை அள்ள வேண்டும். இவ்விடத்தில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுதா, தென்னம்பாளையம். (படம் உண்டு)
திருப்பூர், 22வது வார்டு, சிங்காரவேலன் நகரில் குப்பை தொட்டி அருகில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். குப்பை அள்ள மாநகராட்சி ஊழியர்கள் வருவதில்லை.
- மனோகரன், சிங்காரவேலன் நகர். (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
திருப்பூர் டவுன்ஹால் பஸ் ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் அவ்வப்போது வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- வின்சென்ட்ராஜ், டவுன்ஹால். (படம் உண்டு)
சாலையை சீரமைக்கலாமே!
திருப்பூர், அவிநாசி ரோடு, தண்ணீர்பந்தல் காலனி, டிஸ்ேஸா ஸ்கூல் சாலையில் மழைநீர் தேக்கத்தால், சாலை சேதமடைந்துள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும்.
- அசோக், தண்ணீர்பந்தல்காலனி. (படம் உண்டு)
திருப்பூர், பொம்மநாயக்கன்பாளையத்தில் இருந்து நெருப்பெரிச்சல் செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர்.
- சங்கர்சதீஷ், பொம்மநாயக்கன்பாளையம். (படம் உண்டு)
ரியாக் ஷன்
குப்பை அள்ளிட்டாங்க...
திருப்பூர், வினோபா நகர், தண்ணீர் டேங்க் அருகே, அள்ளப்படாமல், தேங்கியிருந்த குப்பை குறித்து செய்தி வெளியிடப்பட்டது. மாநகராட்சி துாய்மை ஊழியர்கள், குப்பையை அள்ளி சென்று விட்டனர்.
- கருப்புசாமி, வினோபாநகர். (படம் உண்டு)
மின்சாரம் மிச்சமானது!
திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பின் வீதியில், பகலிலும் தெருவிளக்கு எரிந்து மின்சாரம் வீணாகி வந்தது. 'தினமலர்' செய்தி வெளியிட்ட பின், தெருவிளக்கு அணைக்கப்பட்டு விட்டது.
- விஸ்வநாதன், பி.என்., ரோடு. (படம் உண்டு)