வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தலைநகர் டில்லியில் தொழிற்சாலை ஒன்றி பெட்டியில் இரு குழந்தைகள் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லியின் முக்கிய பகுதியான ஜாமியா நகரில் தொழிற்சாலை ஒன்று உள்ளது.
இங்கு மரப்பெட்டியில் இரு குழந்தைகள் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு போலீசார் விரைந்து சென்று பெட்டியை உடைத்து சோதனை நடத்தினர்.அப்போது பெட்டியில் சுமார் 7 மற்றும் 6 வயது மதிக்கத்தக்க இரு குழந்தைகள் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
![]()
|
இது குறித்து டில்லிபோலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன் ஜாமியா காவல்நிலையத்தில் நீரஜ்,7 மற்றும் ஆர்த்தி,6 ஆகிய இரு குழந்தைகள் காணாமல் போனதாக புகார் பதிவாகியுள்ளது. தற்போது பிணமாக மீட்கப்பட்ட குழந்தைகள் தான் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது விசாரணை நடக்கிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.