''கூட்டு சேர்ந்து கோவில் பணத்தை, 'ஆட்டை' போட்டிருக்காவ வே...'' என்றபடியே, இஞ்சி டீயுடன் வந்தமர்ந்தார் அண்ணாச்சி.
''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார்ல, கொண்டத்து காளியம்மன் கோவில்னு கேள்விப்பட்டிருக்கீரா வே... அந்த கோவில் திருவிழா சமீபத்துல நடந்துச்சு...
''விழாவுல, பக்தர்கள் குண்டம் இறங்குறது, கடைகளை வாடகைக்கு விடுறது போன்ற வருமானம் தரும் பணிகளை, அறநிலையத் துறையினர் முறையா செய்யாம விட்டுட்டாவ வே...

''ஏகப்பட்ட குளறுபடிகளோட ஒருவழியா விழா முடிஞ்சிட்டு... குண்டம் இறங்கும் விழாவுல கிடைச்ச வருமானத்துல பொய் கணக்கு காட்டி, கோவில் அதிகாரிகள், தக்கார்னு சிலர், 18 லட்சம் ரூபாயை பதுக்கிட்டதா புகார் கிளம்பியிருக்கு வே...
''சில ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், இது சம்பந்தமா அந்த அதிகாரிகளிடம் முகத்துக்கு நேராகவே பளிச்சுன்னு கேட்டுட்டாவ... பயந்து போன அவங்க, கேள்வி கேட்டவங்க வீட்டுக்கே போய், 'இதை பெரிசாக்க வேண்டாம்... இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கிடுதோம்'னு மன்னிப்பு கேட்டிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.