வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழகத்தில், 20 சென்ட் அல்லது அதற்கு மேற்பட்ட நிலம் விற்பனையை பதிவு செய்ய, சார் பதிவாளர்கள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, பொது மக்கள் கூறியதாவது:
வீட்டுமனை அல்லாத வகைப்பாட்டில் உள்ள நிலங்களை பதிவு செய்வதில், அறிவிக்கப்படாத சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, 20 சென்ட் அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளில் உள்ள நிலங்கள், மொத்தமாக அல்லது தனித்தனியாக பிரித்து பதிவு செய்ய, சார் பதிவாளர்கள் அனுமதி மறுக்கின்றனர்.
![]()
|
இத்தகைய பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டால், அதை நிலுவையில் வைத்து, மேலதிகாரிகளின் ஒப்புதல் அவசியம் என்கின்றனர். சார் பதிவாளர்களின் இத்தகைய செயல்பாடுகள், சந்தேகத்தை கிளப்புவதாக உள்ளன.
எனவே, சட்டப்படி தகுதியுள்ள அனைத்து பத்திரங்களையும் பதிவு செய்ய, சார் பதிவாளர்கள் முன்வர வேண்டும். இதற்கு பதிவுத் துறை தலைமை உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர்