''தி.மு.க., மூத்த எம்.பி., க்கள், 'அப்செட்'ல இருக்கா ஓய்...'' என குப்பண்ணா தொடர்ந்தார்.
''அவங்களுக்கு என்னவே பிரச்னை...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''ஒடிசா ரயில் விபத்து நிவாரண பணிகளுக்காக, அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் உட்பட சில அதிகாரிகள் குழுவை, தமிழக அரசு அனுப்பி வச்சதோல்லியோ...
''அதுபோல, 'மூத்த எம்.பி.,க்கள் பாலு, கனிமொழி, ராஜா, சிவா ஆகியோரையும் அனுப்பி வச்சிருக்கலாமே'ன்னு கட்சியில சிலர், 'பீல்' பண்றா ஓய்...
''எம்.பி.,க்கள் என்ற முறையில, மீட்பு பணிகள், நிவாரணம் தொடர்பா, பிரதமர் அலுவலகம் மற்றும் டில்லியில உள்ள மூத்த அதிகாரிகளை, இவாளால ஈசியா தொடர்பு கொண்டு பேசியிருக்க முடியுமோன்னோ...
''அதை விட்டுட்டு, உதயநிதி தலைமையில குழுவை அனுப்பியதுல, மூத்த எம்.பி.,க்களுக்கு வருத்தம் தான் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெரியவர்கள் கலைய, பெஞ்ச் மவுனித்தது.